செவிலியர்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்க கோரி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை குறித்து முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “செவிலியர்கள் தங்களது தனியார் வேலையை விட்டுவிட்டு கொரோனா காலத்தில் அரசு பணியில் பணியாற்ற வந்துள்ளனர்.
மேலும் இவர்கள் தொற்று உச்சத்தில் இருந்த பொழுது தங்களது உயிரையும் கருத்தில் கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றினார்கள். இதனால் இவர்களுக்கு பணி பாதுகாப்பும், பணிநிரந்தரமும் அளிக்க வேண்டும். தற்பொழுது நோயானது தீவிரமடைந்து வருகின்ற காரணத்தால் தமிழ்நாடு அரசு இவர்களின் போராட்டத்தை மையமாக வைத்து செவிலியர்களிடம் கலந்து ஆலோசித்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுருந்தார்.