வரம்பு மீறிய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டுமென்ற வேண்டுகோளையும் நாங்கள் முன்வைக்கிறோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மூன்றாவது பொதுக்குழு கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, பெரியாரின் நினைவு நாளை ஒட்டி திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டை மாநாடு பேரணி போல, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி கோவையில் நிகழ்ந்த நீலச்சட்டை பேரணியை போல, எதிர்வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மதுரையில் மார்க்சிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு செஞ்சட்டை பேரணி ஒன்றினை பெரியாரிய உணர்வால் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து பேரணி நடத்த திட்டமிட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு மொழிவழி மாநிலங்களாக தமிழ்நாடு தன்னுடைய கன்னியாகுமரி மாவட்டம் தன்னோடு இணைத்துக் கொண்ட நவம்பர் 1ஆம் நாளினை தாயக தமிழ்நாடு நாளாக கலை நிகழ்ச்சிகளோடு முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறோம். அரசும் அதை கருத்தில் கொண்டு, அரசு அதை தாயாக தமிழக நாளாக நடத்தவேண்டும், பெரு விழாவாக நடத்த வேண்டும் என்ற அறிவிப்பை முன்னெடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக ஈழத்தில் நடந்த போரின் காரணமாக 1980களில் இங்கே வந்த பல பேர் இங்கு தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இலங்கை என்பது தெரியாதவர்களாக வளர்ந்து இருகிறார்கள். அவர்கள் தமிழக சூழலுக்கு பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் தாயகம் திரும்புவதில் பல பேர் விருப்பமற்று இருகிறார்கள்.
காரணம் அவர்களுக்கான அங்கே வீடுகள் எல்லாம் வெறும் குடிசை வீடுகளும், நிலமற்றதாக இருக்கிறார், அங்கே போய் தங்களுக்கான வேலைவாய்ப்புக்கும் வாய்ப்பில்லை என்ற காரணத்தால்இங்கேயே இருப்பவர்களுக்கு மட்டுமாவது குடியிருமை அளிப்பதற்கு தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.அதே வேலையை திரும்புபவர்களுக்கு உரிய உதவிகளை செய்து பெற வேண்டும் என்ற வேண்டுகோளையும் நாங்கள் முன்வைக்கிறோம்.
குற்றவாளிகளை, குற்றங்களை தடுக்கிறோம் என்ற பெயரால் ஒரு முயற்சி எடுத்து, பெரும் வீச்சாக நடைபெறுகின்ற நடவடிக்கை என்று சொல்லி, பல பேரை கைது செய்கிறார்கள். முன்னர் எப்போதோ வழக்கு இருக்கின்ற பல பேர் மீது வழக்குப் போடுகிறார்கள். எங்கள் தோழர்களை கூட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அப்படி செய்திருக்கிறார்கள்.
அதைவிட எங்களுடைய பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு நடுவக்குழு உறுப்பினர்களாக இருக்கின்ற குடந்தை அரசன் மீது கூட காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் அவர் வீட்டுக்குள் நுழைந்து, அவரை தேடுவதும், அவரின் தம்பியை அழைத்துச் செல்வதுமான வரம்பு மீறிய செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு காவல்துறையினர் உயர் அதிகாரிகளும், உள் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் அவர்களும் கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட வரம்பு மீறிய நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டுமென்ற வேண்டுகோளையும் நாங்கள் முன்வைக்கிறோம் என தெரிவித்தார்.