தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஒலியுடன் வந்து கொண்டிருந்தது. இதனால் முதல்வரின் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி ஆம்புலன்ஸ்-க்கு வழி விட்டனர். ஆம்புலன்ஸ் என்ற பிறகு முதல்வர் காரில் கிளம்பினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் அண்ணா சாலையில் விபத்தில் சிக்கிய ஒரு நபரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த 2 சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியான நிலையில் முதல்வருக்கு பலரும் வாழ்த்துக் களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் அம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் 10,000 ருபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.