அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் திறந்த வெளியில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க மத்திய மாநில, மாநில அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வெள்ளத்தால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 மற்றும் 2 முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிதி உதவி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.