Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழக முதல்வர் குறித்து அவதூறு பேச்சு…. பா.ஜ.க பிரமுகர் கைது…. காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு….!!!

தமிழக முதல்வரை அவதூறாக பேசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் கடந்த 6-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். இவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி, கனிமொழி எம்.பி ஆகியோரைப் பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து தி.மு.க மாவட்ட பொருளாளர் கேட்சன் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயப்பிரகாஷை கைது செய்தனர். இந்த தகவலையறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்நிலையத்தின் முன்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |