முதல் முறையாக தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பு பிரிவில் முதல் முறையாக பெண் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளர். இதற்கு முன்னதாக 250-க்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் சுழற்சி முறையில் முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அதில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்ட நிலையில்,மேலும் சில பெண் காவலர்களை சேர்க்க பயிற்சிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.