Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு லெட்டர் அனுப்பினார் ஓபிஎஸ்…. எதற்கு தெரியுமா?….!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நீதி கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க இந்தியா முழுவதும் உள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமூக நீதி கூட்டமைப்பில் இணைய விருப்பம் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்த கூட்டமைப்பில் துருவி துருவி பார்த்தாலும் தமிழ்நாட்டின், மக்கள் நலன் எதுவும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் ஓர் அமைப்பை தொடங்குவதற்கு முன்பாக ஒத்த கருத்து கொண்டவர்களை அழைத்து பேசி இருக்க வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |