Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு…. பாலோவ் பண்ண கட்சி நிர்வாகிகள்…..!!!!

வருகிற 18ம் தேதி குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். இதையடுத்து காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய எதிர்க்கட்சிகள் சார்பாக பொதுவேட்பாளராக, முன்னாள் மத்தியநிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களம் இறங்குகிறார். இவற்றில் திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூகநீதி பேசும் தி.மு.க தலைமை பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்காமல், யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதை பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் விமர்சித்துள்ளது.

சமூகநீதி, சமத்துவம், பெண் உரிமை பேசும் தி.மு.க, பழங்குடியின பெண் வேட்பாளரை ஆதரிக்காமல், உயர்சாதி வேட்பாளரை ஆதரிப்பதாக சமூகஊடகங்களிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதன் காரணமாக திமு.க-வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்ஹா, சென்ற ஜூன் 30ஆம் தேதி சென்னை வந்தார். இதனிடையில் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், யஷ்வந்த் சின்ஹாவை ஆதரித்து ஓரிரு வார்த்தைகளோடு முடித்து கொண்டார். இவரை எதற்காக ஆதரிக்கிறோம் என்பதைகூட பேசாமல் தி.மு.க., எம்.பி., சிவாவிடம் விட்டுவிட்டார்.

பின் அவரும் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் முர்முவை விமர்சிக்காமல், எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையை காட்டவே சின்ஹாவை நிறுத்தியுள்ளோம் என்பதோடு நிறுத்திக் கொண்டார். இதுகுறித்து அறிவாலய வட்டாரங்கள் கூறியிருப்பதாவது “குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி உறுதி. அதன்பிறகு ஏதாவது பிரச்னை, கோரிக்கை எனில் அவரைதான் சந்திக்க வேண்டும். மேலும் திரெளபதி முர்மு, பழங்குடியின பெண். அவரை எதிர்ப்பது பிற் காலத்தில் வேறு விதமாக பேசப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே சின்ஹாவை ஆதரித்து பேசுங்கள், ஆனால் திரெளபதி முர்முவை விமர்சித்து, ஒரு வார்த்தையும் பேசக்கூடாது’ என கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |