Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்…. பீதியில் அண்ணாமலை…. வெளியான தகவல்….!!!!

தமிழக முதல்வர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றினார். இங்கு கொடி ஏற்றப்பட்ட பிறகு முதல்வர் பொதுமக்களிடம் உரையாற்றுவது வழக்கம். கடந்த 1973-ம் ஆண்டு வரை மாநிலங்களில் கவர்னர் தான் தேசியக்கொடியை ஏற்றினார்கள். இதன் காரணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மத்திய அரசிடம் சுதந்திர தினத்தன்று முதல்வர்கள் செங்கோட்டையில் கொடியேற்ற வேண்டும் என்றும், குடியரசு தின விழா அன்று கவர்னர்கள் கொடியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும் அதற்கான சட்டத்தை பிறப்பித்தது. கடந்த 1974-ஆம் ஆண்டு செங்கோட்டையில் கலைஞர் கருணாநிதி முதன்முதலாக தேசிய கொடியை ஏற்றினார்.

இந்நிலையில் சுதந்திர தின விழா முடிவடைந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாகவும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் வருகை புரிந்ததற்கு நன்றி தெரிவிக்க போவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் காரின் மீது செருப்பு தாக்குதல் நடத்திய பாஜகவினர் குறித்தும் பேச இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் பிரதமருக்கும் சமீப காலமாகவே நெருக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படும் நிலையில், முதல்வரின் டெல்லி பயணத்தால் ‌ அண்ணாமலை பீதியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |