தமிழக அமைச்சர்களுக்கும் சில துறைகளில் செயலாளர்களுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது என்று அரசியல் புறசலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் துறை செயலாளர்கள் ஆய்வு கூட்டத்தில் முதல்வரை இது போன்ற வெளிப்படையாக பேசியது கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோட்டை வட்டாரங்களில் கூறியது, டெண்டர் விவகாரம், அமல்படுத்தப் போகும் திட்டங்கள், கொள்முதல் என தமிழக அரசியலில் எடுக்கப்படும் முக்கிய விவகாரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பகிரங்கமாக வெளியிட்டு வருகிறார். அதனைப் போல் அதிமுக கட்சி எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும் இந்த தகவல் பாஸ் ஆகிறது. ஒரு அறைகள் பேசப்படும் நான்கு நபர்களுக்கு மட்டும் தெரிந்த விவகாரம் எப்படி எதிர்க்கட்சியினருக்கு பாஸ் ஆகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குழப்பத்தில் இருந்தார்.
இது குறித்து விசாரித்து ரிப்போர்ட் அளிக்க மாநில உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அவர்கள் அந்த ரிப்போர்ட்டை தற்போது முதல்வரிம் சமர்ப்பித்து உள்ளனர். அதில், மத்திய உறவு அமைப்புகள் மூலம் அனைத்து மட்டத்திலும் நடக்கும் விஷயங்கள் மத்திய அரசுக்கு பாசாகிறது. அங்கிருந்து ஆளுநர் அண்ணாமலை ஆகியோருக்கு தகவல் கொடுக்கின்றனர். தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் பலர் தங்கள் துறையில் நடக்கும் விவகாரங்கள் குறித்து துல்லியமாக தகவல்களை கொடுக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனை போல அதிமுக ஆட்சியில் அந்த ஆட்சிக்கு விசுவாசமாக இருந்த டம்மியாக்கப்பட்டுள்ள அதிகாரிகளோடு எடப்பாடியுடன் நெருங்கி பழகும் ஓய்வு பெற்ற அதிகாரிகளுடன் தற்போது முக்கியத்துறைகளின் செயலாளர்களாக இருப்பவர்கள் நெருக்கம் காட்டுகின்றனர். இவர்களை அனைவரையும் ஸ்மெல் செய்து மேல் இடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. உளவுத்துறை சமீபத்தில் நடைபெற்ற முக்கியத்துறையில் கூடுதல் இயக்குனர் இல்லத் திருமண விழாவில் அதிமுகவுக்கு நெருக்கமான அதிகாரிகளுடன் இணக்கம் காட்டப்பட்டுள்ளது.
இதுவரை உன்னிப்பாக கவனித்து உளவுத்துறை முதல்வருக்கு நோட் வைத்துள்ளது என்று கூறுகிறார்கள். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் துறை அதிகாரிகளின் இந்த தகிடுதத்தங்கள் அந்தத் துறையில் அமைச்சர்களுக்கு தெரியாதாம். அத்துடன் சில அமைச்சர்களும் தங்களை துறை செயலாளர்கள் மீது ஸ்டாலினிடம் நேரடியாக பலமுறை புகார் அளித்தனர். மேலும் அமைச்சர்களுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் துறை செயலாளர்களின் லிஸ்டும் எடுக்கப்பட்டுள்ளது. நியாயமான காரணங்களுக்காக முதல் போக்கை கடைபிடிப்பவர்களை சிக்கல் எதுவுமில்லை. அதே நேரத்தில் எதிர் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்து கொண்டு அமைச்சர்களுடன் முதல் போக்கை கடைப்பிடிப்பவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கும் அதிகாரிகள் மீது இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் நடவடிக்கை பாயலாம் என்று கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடே அரசு துறை செயலாளர் ஆய்வுக்கூடத்தில் முதல்வரின் பேச்சு என சுட்டிக்காட்டும் அவர்கள் விரைவில் 10க்கும் மேற்பட்ட துறைகளில் செயலாளர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.