Categories
மாநில செய்திகள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…. 74வது பிறந்த நாள் இன்று….!!!!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 74வது பிறந்த நாள் இன்று (பிப்.24) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் துவண்டு போய் உள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் அடிப்படையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |