Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களும் அவரவர் பள்ளிகளிலும் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் என்று 75 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுதந்திர தின விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் அவரவர் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி அதை புகைப்படம் எடுத்து தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், சென்னையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்க அலுவலகத்தில் நடக்கும் விழாவில் பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் சாரண சாரணியர் இயக்க கமிஷனர் இளங்கோவன் பங்கேற்க உள்ளனர். அதனைப் போலவே சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலை,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே இதனை தொடர்ந்து ஆசிரியர்கள் அனைவரும் இன்று அவரவர் வீடுகளில் கொடியேற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது m

Categories

Tech |