தமிழகத்தில் அரசு பள்ளியில் உள்ள ஊழியர்கள் தங்கள் பணி காலத்தில் தங்களுக்கு தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள். இதனையடுத்து அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் அரசு உடனடியாக ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும். ஆனால் ஊழியர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாத பட்சத்தில் அவை நிராகரிக்கப்படும். இது போன்ற ஊழியர்களின் கோரிக்கை அரசு நிராகரிக்கும் போது அல்லது தாமதிக்கும் போது ஊழியர்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
அதன் படி பல ஆண்டுகளாக அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பணி காலத்தில் கூடுதல் கல்வித் தகுதியை பெற்றால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கோரிக்கையை ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் அரசிடம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி முன்பு பணியில் சேர்ந்து ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை போல கூடுதல் கல்வி பெற அரசால் அனுப்பப்பட்டு இருந்தாலும் அல்லது கல்வி விடுப்பு பயன்படுத்தி கூடுதல் கல்வி பெற்று இருந்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை. மேலும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஒய்வு பெறும் நாள் வரை 2 முறை மட்டுமே கூடுதல் கல்விக்கான ஊக்க தொகையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.