Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் உடனே….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பழுதடைந்த மற்றும் உபயோகம் அற்ற மர சாமான்கள் மற்றும் இரும்பு பொருட்கள் நீண்ட காலமாக வகுப்பறைகள் மற்றும் வெளிப்புறங்களில் இருக்கின்றன.

பள்ளிகளில் இட பற்றாக்குறை காரணமாக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சாமான்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அகற்றுவதற்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். அவ்வாறு பயன்படாற்ற பொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்து அந்த தொகையை உரிய அரசு வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |