தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மானிய தொகையை பள்ளி கல்வித்துறை தற்போது விடுவித்துள்ளது. அதன்படி ஒன்று முதல் 30 மாணவர்கள் எண்ணிக்கையில் எட்டாம் வகுப்பு வரையில் 11,251 பள்ளிகளிலும், ஒன்பது முதல் +2 வகுப்பு வரையில் 14 பள்ளிகள் என 11,265 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதியாக தலா பத்தாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனைப் போலவே 31 முதல் 100 மாணவர்கள் 1 முதல் எட்டாம் வகுப்பு வரையில் 13 ஆயிரத்து 27 பள்ளிகளிலும், ஒன்பது முதல் +2 வகுப்பு வரையில் 567 பள்ளிகளிலும் பராமரிப்பு நிதியாக தலா 25,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதனைப் போலவே மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி பள்ளி வகுப்பறை, வளாகத் தூய்மை, தூய்மையான குடிநீர், கை கழுவும் வசதி,கழிப்பறை தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.