தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக அவ்வபோது புதுவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது எப்போதும் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய்,திண்டுக்கல் சிறு வாழை மற்றும் நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வியாபாரத்திற்காக லாரி மற்றும் பார்சல் சர்வீஸ் மூலமாக மற்ற ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
ஆனால் தற்போது குறைந்த அளவிலான பொருட்களை அந்த லாரி மற்றும் பார்சல் சர்வீஸ் வாடகைக்கு இணையாகவே பேருந்திலும் பொருட்களை கொண்டு செல்ல முடியும். அதன்படி பொதுமக்கள்,விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக பேருந்தில் உள்ளசுமை பெட்டியை வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. பேருந்தின் சுமை பெட்டிகள் மூலமாக பொருட்களைக் கொண்டு செல்ல விரும்பினால் அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் சென்று விண்ணப்பிக்கும் படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.