Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ஆசிரியர்களுக்கு பண்பாடு, கலாச்சாரம் குறித்து பயிற்சி…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 1460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழர் பண்பாடு குறித்து தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து ஒவ்வொரு மாதமும் பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அவ்வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறை மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

தமிழக முழுவதும் 1460 பேருக்கு தொல்லியல் துறையின் நிபுணர்கள் பயிற்சி வழங்க உள்ளனர்.இந்த பயிற்சிக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பண்டைய தமிழர் நாகரிகம், கலாச்சாரம்,வாழ்வு முறை மற்றும் தொன்மை குறித்த சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைப்பது மற்றும் வரலாறு பாடங்களில் தொல்லியல் சார்ந்த கருத்துக்கள் இந்த பயிற்சியில் இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |