Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இனி இதற்கு தடை…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 48 முதுநிலை கோவில்களில் செல்போன் பயன்பாடு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் கோவில்களில் அலைபேசி பயன்பாடு தடை குறித்த நீதிமன்ற உத்தரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைமுறையில் உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 48 முதுநிலை கோவில்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

முதலில் திருச்செந்தூரில் அலைபேசிகளுக்கு டோக்கன் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய செல்வோர் அலைபேசி இல்லாமல் சென்றால் நிம்மதி தரும் என்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |