தமிழகத்தில் நெல் உற்பத்தியை பெருக்கும் வகையிலும் விவசாயிகளின் துயர் துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கிலும் இந்த ஆண்டில் சாதாரணம் நெல் குவிண்டலுக்கு 75 ரூபாயும் சன்னரக நெல் குவிண்டாலுக்கு நூறு ரூபாயும் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தமிழகத்தில் இன்று முதல் கொள்முதல் நிலையங்களில் சாதாரண நெல் 2115 ரூபாய், சன்ன ரக குவிண்டாலுக்கு 2160 என்ற விகிதத்தில் கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையினை 1.09.2022 முதல் வழங்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.