தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் திறந்தால் அல்லது மறைமுகமாக விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இறைச்சிக்கடையை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.