Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. ஆசிரியர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கான விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்ப ஏதுவாக அக்டோபர் 25ஆம் தேதி அதாவது நேற்று ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படுகிறது.எனவே அவசர தேவைகளை தவிர ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |