தமிழக முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து அரசு பள்ளிகளில் உள்ள 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று ( ஜூலை 6 ம் தேதி ) தான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.