Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இரவு கடைகளில் இனி…. போலீசுக்கு டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் ஒருபோதும் தலையிடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமும் சில வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறைக்கு வழங்கியுள்ளது. எனவே அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ் பி களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சில இடங்களில் காவல்துறை அதிகாரிகள், போலீசார் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

எனவே இனி சட்ட விதிகளின்படி செயல்படும் வணிக நிறுவனங்கள்,கடைகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றின் வணிக செயல்பாடுகளில் அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் போலீசார் யாரும் குறிப்பிடக் கூடாது. அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |