Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் உள்ள ரவுடிகளின் முழு விவரமும் இனி போலீஸ் கையில்…. புதிய செயலி அறிமுகம்….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய “ட்ராக் கேடி” என்ற அலைபேசி செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகம் செய்துள்ளார் . தமிழகத்தில் உள்ள ரவுடிகளில் எத்தனை பேர் சிறையில் உள்ளனர், ஜாமினில் எத்தனை பேர் உள்ளனர், எத்தனை ரவுடிகளிடம் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கின்ற வழக்குகள் எத்தனை, எந்த மாதிரியான குற்றங்களில் ரவுடிகள்  ஈடுபட்டனர் என்பது குறித்து அனைத்து விவரங்களும் அந்த செயலியில் திரட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 30000 ரவுடிகள்  குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்ட மின்னணுமயமாக்கப்பட்டுள்ளன. ரவுடிகள் அனைவரையும் தொடர்ந்து கண்காணிக்கவும் தகவல் அறிந்து கொள்ளவும் இந்த செயலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை போலீஸ் சுய அதிகாரிகள் மட்டுமே டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |