Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு…. அரசு திடீர் அதிரடி உத்தரவு…. யாரும் இதை செய்ய முடியாது….!!!!

தமிழகத்தில் முறையற்ற மதுபான விற்பனையை தடுப்பதற்காக அரசு மதுபான விற்பனையை டாஸ்மாக் மூலம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக்கின் ஊழியர்கள் பணி நியமனம் அரசின் அறிவுறுத்தலின்படி நடைபெறுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பணியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் படி நேரத்தில் கடைகளில் இல்லாமல் வேறு நபர்களை பணிக்கு நியமித்துள்ளதாக பல புகார்கள் இணைந்துள்ளன.

இதனால் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அதிகாரிகள் இனி ஊழியர்கள் அனைவரும் முறையாக டாஸ்மாக் கடைகளில் பணியில் இருக்கின்றனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வெளி வேலைகளுக்கு செல்லும்போது உரிய அதிகாரியின் அனுமதி கடிதம் பெற வேண்டும் எனவும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பணி குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |