தமிழகத்தில் கடந்த 2011 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் 2022-23ஆம் ஆண்டுக்கான கட்டிட திட்ட அனுமதி அங்கீகாரம் புதுப்பிக்க கோரி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தனியார் பள்ளிகள் நிர்வாகம் முன்னதாக திட்ட அனுமதி தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி,தமிழ்நாடு நகர் மற்றும் ஊரக சட்ட விதிகளின்படி தனியார் பள்ளிகள் திட்ட அனுமதி குறித்து விண்ணப்பித்து இருந்த நிலையில் அவை முறையான அனுமதி வழங்கப்படாமல் இருக்கின்றது. எனவே கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பின்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.