நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அனைத்து வீடு மற்றும் கடைகள்,நிறுவனங்களில் நாளை முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி கொண்டாட அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள்,பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வீடுகளில் நாளை முதல் 15 ஆம் தேதி வரை தேசியக்கொடி ஏற்றி வைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினங்களில் தேசியக்கொடியை அணிந்து பணியாற்ற வேண்டும் எனவும் வாடிக்கையாளர்களுக்கு தேசியக்கொடியை விநியோகம் செய்யவும் அனைத்து போக்குவரத்து வாகனங்களில் தேசியக்கொடியை ஒட்டி வைக்கவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல் செய்திகளில் தேசியக்கொடி சின்னத்தின் புகைப்படம் வைக்கவும் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியை செல்பி படம் எடுத்து http://amritmahostsav.nic.in/என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.