Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நீதிமன்றங்களில்…. 5000 பணியிடங்கள் காலி…. அரசின் முடிவு என்ன….????

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 1200க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து நீதிமன்றத்திலும் 25,322 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது 5,070 காலி பணியிடங்கள் உள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 722 பணியிடங்கள் காலியாக உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை,மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஐயா ஆறு மாவட்டங்களில் நீதித்துறை நிர்வாகம் இன்னும் தனியாக பிரிக்கப்படவில்லை.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 259 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.இந்த காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பும் பட்சத்தில் வழக்குகள் தேக்கம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கான அறிவிப்புகள் தமிழகத்தில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |