தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அங்கன்வாடி மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெற்று வந்தது.அவ்வகையில் தமிழக முழுவதும் 2381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த வருட முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அண்மையில் அரசு அறிவித்தது.அரசு இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்று மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் செயல்படும் என அறிவித்தது.
தற்போது தமிழக முழுவதும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் கடந்த ஜூன் மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது.இந்நிலையில் தமிழக முழுவதும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் ஐந்தாயிரம் தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை பள்ளி மேலாண்மை குழு மூலமாக நிர்ணயம் செய்ய தமிழக அரசு 13 புள்ளி 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.