Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் இனி இதற்கு தடை…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதே சமயம் தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி வழங்கப்பட வேண்டும் என அரசு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதேசமயம் ஏழை எளிய மாணவர்கள் அனைவருக்கும் இந்த நலத்திட்டங்கள் சரியாக சென்றடைகின்றதா என்பதை அரசு அவ்வப்போது கண்காணித்து வருகின்றது. பள்ளிகளில் ஜாதி மத பாகுபாடு இருக்கக் கூடாது என்பதால் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி வளாகங்களில் அரசியல் கூட்டம் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,தமிழகத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் எந்த அரசியல் அமைப்பினருக்கும் கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது என உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த உத்தரவை தொடர்ந்து எந்த பள்ளி வளாகங்களிலும் கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |