தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றது.அதன்படி வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இதில் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி,மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் உள்ளிட்டவை தொடர்பாக விவாதங்கள் மேற்கொள்ளலாம். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வருகின்ற 28ஆம் தேதி நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.