தமிழகத்தில் ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்பான கண்காணிப்பு பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். விடுதி கண்காணிப்பாளர் அனைத்து நேரங்களிலும் அணுகக் கூடிய நிலையில் இருக்க வேண்டும்.
கல்வி நிறுவன பொறுப்பாளர்கள், ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் ராகின் எதிர்ப்பு குழு உறுப்பினர்கள், மாநில அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் வெளிப்படையாக மாணவர்களிடம் தெரிவிக்கப்பட வேண்டும். ராகிங்கியில் ஈடுபடவோ அல்லது அதற்கு துணை புரிந்து விடவோ கூடாது என உறுதிமொழியை ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் ஒவ்வொரு மாணவருக்கும் கையேடு துண்டறிக்கை மூலமாக விநியோகம் செய்து உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெற வேண்டும். இணையவழி காவல் உதவி மற்றும் இலவச உதவி எண்ணில் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்.