Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் மின் கட்டண உயர்வு அமல்?…. பேனர்களால் அதிர்ச்சியடைந்த மக்கள்…..!!!!

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள மின்வாரியம் அதற்கான பரிந்துரையை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. பொதுவாக இது போன்ற பரிந்துரை வரும்போது மக்களிடம் கருத்து கேட்கப்படும். அதன் பிறகு தான் ஆணையம் மின்கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கும். அதில் மின்வாரியம் பரிந்துரைக்கும் மின் கட்டணத்தை ஆணையம் அப்படியே ஏற்கலாம் அல்லது அதனை குறைக்கலாம். இல்லையென்றால் முற்றிலும் நிராகரித்து விடலாம்.தமிழகத்தில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. மின் கட்டண அளவை இரு மாதங்களுக்கு ஒரு முறையும், மின் கட்டண உயர்வை மாதம் ஒரு முறையும் கணக்கிட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, 101லிருந்து 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, மாதத்துக்கு 27.50 ரூபாயும், 301- – 400 யூனிட்டுக்கு 147.50 ரூபாயும், 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மாதத்துக்கு 297.50 ரூபாயும், 600 யூனிட் பயனீட்டாளர்களுக்கு, 155 ரூபாயும், 700 யூனிட் பயனீட்டாளர்களுக்கு 275 ரூபாயும், 800 யூனிட் பயனீட்டாளர்களுக்கு 395 ரூபாயும், 900 யூனிட் பயன்படுத்துவோருக்கு 565 ரூபாயும் மாதத்துக்குக் கணக்கிட்டு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது இரு மாதங்களுக்கு ஒரு முறை தான் மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது. ஆனால் மின் அளவீட்ட இரு மாதங்களுக்கு கூறிவிட்டு உயர்த்தப்படும் கட்டணத்தை ஒரு மாதமாக குறைத்து சொல்லி மக்களை ஏமாற்றியுள்ளது மின்வாரியம். இந்நிலையில் ஆணையம் சார்பில் மக்கள் கருத்து கேட்கப்படும் போது இதற்கு கடும் எதிர்ப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.ஆணையம் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்காத நிலையில் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு பேனர்கள் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.இதனால் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துவிட்டது என்று மக்கள் அனைவரும் குழப்பத்திலும் அதிருத்தியிலும் உள்ளனர்.

Categories

Tech |