தமிழக ரேஷன் கடைகளில் ஜனவரி மாதம் அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனால் பலர் வழக்கமான ரேஷன் பொருட்களை வாங்க தவறிவிட்டனர். மேலும் மாதம் 30-ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தாலும் ரேஷன் கடைகள் செயல்பட்டன. அதற்கு பதிலாக இந்த மாதம் 26-ஆம் தேதி விடுமுறை விட உணவுத்துறை உத்தரவிட்டது.
ஆனால் ரேஷனில் கைரேகை பதிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த மாதம் பலர் ரேஷன் பொருட்களை வாங்காமல் உள்ளனர். இதனால் இன்று (பிப்.26) ரேஷன் கடைகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.