தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்ற பொருட்கள் மலிவான விலையில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பல்வேறு பொருட்கள் மிகவும் தரம் அற்றதாக உள்ளதாகவும், கலப்படமான பொருட்களாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இந்த தரமற்ற பொருட்களை அனுப்பியதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை வழங்குவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை வழங்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரேஷன் பொருட்களின் தரம் தொடர்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ரேஷன் கடைகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் மேலும் பொருட்களின் தரம் தொடர்பாக கார்டுதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளது…