Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இவர்களுக்கு….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் நலனை கருதி ரேஷன் கடைகளில் 2 கிலோ மற்றும் ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,கூட்டுறவு சங்கங்களில் முதல் முறையாக 10 ஆயிரம் கோடியை தாண்டி கடந்த ஆண்டில் விவசாயிகளுக்கு 10,292 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக கூட்டுறவுத் துறையில் ஆடு, மாடு,கோழி மற்றும் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.ரேஷன் கடைகளில் தள்ளு வண்டியில் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆகியோரின் நலனை கருதி 5 கிலோ மற்றும் இரண்டு கிலோ காஸ் சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |