Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இப்படித்தான்…. அமைச்சர் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் கைரேகை மூலமாக பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.ஆனால் சில சமயங்களில் மின்னணு பதிவேட்டில் கோளாறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையிலும் இலவசமாகவும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கோளாறுகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன .

அதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் பல மாநிலங்களில் 100% கண் கருவிழி பதிவு மூலமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதி உள்ளது . அவ்வகையில் தமிழகத்திலும் இந்த புதிய நடைமுறை அக்டோபர் 15ஆம் தேதி முதல் முதற்கட்ட சோதனை நடைபெற உள்ளது.மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |