தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளும் விதமாக எஸ்எம்எஸ் எண்களை அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளுக்கு சேமிப்பு கிடங்குகளில் இருந்து அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருள்களும் தேவையான அளவிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் அவற்றை கடைகளில் வைத்தபடி ஊழியர்கள் வழங்க மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கடைகளில் உள்ள பொருள்களின் இருப்பு விவரத்தை எஸ் எம் எஸ் மூலமாக அறிந்து கொள்ளும் வசதி தற்போது வந்துள்ளது. அதன்படி ரேஷன் அட்டைதாரர்கள் தாங்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணிலிருந்து உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ள எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் இருப்பு விவரம் எஸ் எம் எஸ் மூலமாக வந்து சேரும். எனவே உணவுப் பொருள்களின் இருப்பு விவரத்தை அறிந்து கொள்ளக்கூடிய எஸ்எம்எஸ் எண்களை அனைத்து ரேஷன் கடைகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.