தமிழக முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் பெறுவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.மேலும் இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஒரு கோடியே 12 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது