Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் விரைவில் இதற்கு தடை…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் சாணி பவுடர் மற்றும் எலி மருந்து விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வகையில் மருத்துவத்துறை சார்பாக மனம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சி என்னும் ஒருவருக்கு ஒருமுறை வந்து விட்டால் முடிவு தற்கொலையாக தான் இருக்கும்.

எந்த ஒரு சூழலிலும் தற்கொலை என்ற எண்ணமே வரக்கூடாது. சாணி பவுடர்,எலி மருந்து ஆகியவற்றை பயன்படுத்தி பலரும் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் இவற்றை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தனியாக ஒருவர் வந்து எலி மருந்து கேட்டால் கடைகளில் கட்டாயம் கொடுக்க கூடாது. அதேசமயம் மக்கள் பார்வையில் படும்படி எலி மருந்தை விற்பனை செய்யவும் கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |