Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் 10 ஆயிரம் பேருக்கு வேலை – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து நேற்று முதல் முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களின் பங்கு மிக பெரியது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 2000 மருத்துவர்கள், 6000 செவிலியர்கள் 2000 ஒரு தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் இரும்பாலையில் 500 படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை மையம் மே-25க்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1212 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |