தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களுக்கு பதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படலாம் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,000 வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உணவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் மளிகை பொருட்கள் தரம் குறித்து புகார் எழ வாய்ப்புள்ளதால் ரொக்கமாக வழங்க ஆலோசிக்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பணமாக வழங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.