தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் குடும்ப அட்டை இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியில் இதுவரை 3 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய ரேஷன் கார்டுகளுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.