குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆவணமாக கருதப்படும் ரேஷன் கார்டு மூலம் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் முன்னதாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ரேஷன் கடைகள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து பொங்கல் பரிசு பொருள்கள் கொடுக்கும் பணி நடந்து வந்ததால் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது பொங்கல் பரிசு வழங்கும் பணி முடிந்து விட்டதால் வழக்கம் போல் பொருள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 30) ரேஷன் கடைகள் செயல்படும் என கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 30-ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 26-ஆம் தேதி சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.