Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே!…. இனி இப்படியும் பொருள்கள் வாங்கலாம்?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆவணமாக கருதப்படும் ரேஷன் கார்டு மூலம் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைத்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் மலிவான விலையில் அத்தியாவசிய பொருள்களை பெற்று பலனடைந்து வருகின்றனர்.

அதே போல் ரேஷன் அட்டை புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் உடனடியாக ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரேஷன் அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் போது கைரேகை பதிவு இயந்திரங்களில் சரியாக பதிவாகவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே ரேஷன் கடைகளில் மக்களுக்கு பழைய முறைப்படி பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைரேகை பதிவு இயந்திரங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருந்தால் உடனடியாக QR-ஐ ஸ்கேன் செய்து பொருள்களை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருள்களை எண்ணெய் விற்பனை முனையத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |