Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. இனி தரமான பொருட்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தொடங்கியது முதல் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இது குறித்து விரிவாக விசாரணை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரிசி உள்ளிட்டவை விநியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கு வரக்கூடிய பொருட்கள் தரமாக இல்லை என்றால் ஊழியர்கள் திருப்பி அனுப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் தரமாக இருக்கிறதா என்பதை அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்றும் அதை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் நடத்தப்படும் ஆய்வின்போது காலாவதியான பொருட்கள் இருக்கிறதா ? என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து இனி அனைத்து மக்களுக்கும் தரமான ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |