அனைத்து இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது. இந்த ரேஷன் கார்டு வாயிலாக ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். தற்போது ரேஷன் அட்டை டிஜிட்டல் கார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC என்று 5 வகையான தரநிலை ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இந்த ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆகும்.
எனவே இது போன்ற சூழ்நிலையில் தவறான மொபைல் எண் அல்லது பழைய எண்ணை ரேஷன் கார்டில் உள்ளிட்டால் சிக்கல் ஏற்படும். சரியான மொபைல் எண் ரேஷன் கார்டில் இருக்க வேண்டியது அவசியமாகும். தேவைப்பட்டால் ரேஷன் அட்டையில் சரியான மொபைல் எண்ணை புதுப்பிப்பது மிகவும் அவசியம். ரேஷன் அட்டையில் சரியான மொபைல் எண்ணை ஆன்லைன் முறை மூலம் புதுப்பிக்கலாம்.
ரேஷன் கார்டில் சரியான மொபைல் எண்ணை ஆன்லைன் முறை மூலம் புதுப்பிக்க எளிய வழிமுறைகள் :-
* மொபைல் எண்ணை அப்டேட் செய்ய முதலில் https://nfs.delhi.gov.in/Citizen/UpdateMobileNumber.aspx என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.
* இப்போது ஒரு பேஜ் ஓபன் ஆகும். அதில் ‘உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை புதுப்பிக்கவும்’ என எழுதப்பட்டிருக்கும்.
* இப்போது உங்கள் தகவலை கீழே கொடுக்கப்பட்டுள்ள காலமில் நிரப்ப வேண்டும்.
* மேலும் முதல் வரிசையில் ‘குடும்பத் தலைவர் ஆதார் எண்/NFS ஐடி’-யை எழுத வேண்டும்.
* 2-வது பத்தியில் ரேஷன் கார்டு எண்ணை எழுத வேண்டும். 3-வது பத்தியில் குடும்பத்தலைவர் பெயரை எழுத வேண்டும்.
* இதையடுத்து கடைசி பத்தியில் உங்களுடைய புதிய மொபைல் எண்ணை உள்ளிட்டு சேவ் செய்ய வேண்டும். இப்போது உங்களுடைய மொபைல் எண் புதுப்பிக்கப்படும்.