Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பிறகு பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் பொருள்களின் தரம் குறித்து தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட அமைச்சர் அரவை ஆலைகளிலும், அரசு கொள்முதல் செய்யும் நிலையங்களிலும் நேரடியாக ஆய்வு செய்து அனைத்து ரேஷன் பொருள்களையும் தரமானதாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

தமிழகத்தில் தற்போது ரேஷன் பொருள்களின் தரம் குறைவாக இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பில் இலவசமாக வழங்கப்பட்ட 21 பொருட்கள் தரம் குறைவானதாக இருந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனால் பிப்ரவரி 17ஆம் தேதி (நேற்று முன்தினம்) கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் , அனைத்து கூட்டுறவு சங்கத்தினரும் பரிசோதிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி,

1. ரேஷன் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

2. ரேஷன் கடைகளில் பொருள்கள் பராமரிப்பு, சரியான கையிருப்பு, கணக்குகளை பராமரித்தல், விற்பனை தொகையை தினந்தோறும் தலைமையகத்தில் செலுத்துதல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

3. ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் தடை இல்லாமல் வழித்தட அட்டவணையின் படி எந்த விலகலும் இல்லாமல் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

4. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து, மாதந்தோறும் கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு நகர்வு பணிக்கு பயன்படுத்தப்படும் பொதுவிநியோக திட்ட நகர்வு வாகனங்கள் மூலம் ரேண்டமாக சரக்கு ஏற்றப்படுவதற்கு முன்பும், பின்பும் எலக்ட்ரானிக் எடை மேடைகளில் எடையிடுவது அவசியம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் வழங்கப்படும் வழங்கல் ஆணைகள் மற்றும் அனைத்து எடை ரசீதுகள் நகர்வு பணியாளரால் சரிபார்க்கப்பட வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் குறைந்தது 25% வழங்கல் ஆணைகளை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விதி) சரிபார்க்க வேண்டும்.

5. ரேஷன் கடையில் நல்ல தரமான பொருட்கள் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் பொருட்கள் தரமற்றது என்று கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக டிஎன்சிஎஸ்சி கிடங்கிற்கு திரும்ப அனுப்பி அதன்பிறகு மாற்று பொருள்கள் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

6. அனைத்து பொது விநியோக திட்ட ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இணக்கமான முறையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

7. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கட்டுப்பாட்டு பொருள்கள் POS Bill-லிருந்து எந்த விலகலும் இல்லாமல் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

8. அதேபோல் விற்பனையாளர் எந்தவொரு காரணத்திற்காகவும் எந்த நேரத்திலும் இரண்டு முழு நேர நியாய விலை கடைகளுக்கு மேல் நிர்வகிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

9. ரேஷன் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் கூட்டுறவு சங்கங்களில் இருந்து போதுமான பணியாளர்களை பரவல் முறையில் நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |