Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்!…. மார்ச் மாத பொருள்கள் கிடைப்பதில் சிக்கல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நேற்று (பிப்.27) விழுப்புரத்தில் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மண்டல அளவிலான போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட செயலாளர்கள் முனிகிருஷ்ணன், கோதண்டராமன், தெய்வீகன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாநில இணைச் செயலர் (ஓய்வு) சின்னத்தம்பி, மாநில இணைச் செயலர் சேகர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் அனந்தசயனன், மாநில பொருளாளர் (ஓய்வு) கலியபெருமாள் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதன் பிறகு இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில இணைச் செயலர் சேகர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு இணையாக நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். ரேஷன் கடைக்கு வழங்கப்படும் தரமற்ற பொருள்களுக்கு விற்பனையாளர்கள் மீது எடுக்கப்படும் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கையினை கைவிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் உள்ள நகைகளுக்கான வட்டி ஆகியவற்றை அரசு வழங்கிய பிறகு நகைகளை தள்ளுபடி செய்து விடுவிக்க வேண்டும் என மொத்தம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற மார்ச் 7ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போகிறோம்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் 4,500 பேரும், பணியாளர்கள் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பங்கேற்க உள்ளனர்” என்று கூறியுள்ளார். ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் இந்த வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பால் ரேஷன் கடைகளில் மார்ச் மாதம் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ ? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இதனால் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |