Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. மார்ச் 31 வரை இலவசம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 2021-ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் மக்களுடைய வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அதில் ஏழை, எளிய மக்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளானார்கள். இதனால் “பிரதம மந்திரி கரீப் கல்யாண்” திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களில் மத்திய அரசு முன்னுரிமை வழங்கப்பட்டது. அந்தியோதயா கார்டுதாரர்கள் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அரிசி முன்னதாக வழங்கப்பட்ட அளவுடன் கூடுதலாக 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் இந்த இலவச அரிசி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் முன்னுரிமை கார்டுதாரர்கள் 93.23 லட்சம் பேரும், அந்தியோதயா கார்டுதாரர்கள் 18.63 லட்சம் பேரும் உள்ளனர். அவர்களுக்கு கூடுதல் அரிசி வழங்குவதற்காக மாதம் 1.80 லட்சம் அரிசி தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து இலவசமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் மத்திய அரசு, சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் மார்ச் (2022) வரை கரீப் கல்யாண் திட்டத்தை நீட்டித்தது. இதனால் இந்த மாதம் வரை தமிழக ரேஷன் கடைகளில் கூடுதல் அரிசி வழங்க தமிழக அரசு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது.

இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச அரசி விநியாகம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரியாததால், ரேஷன் ஊழியர்கள் இந்த இலவச அரிசியை வழங்காமல் முறைகேடு செய்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் வரும் மார்ச் 31 வரை மத்திய அரசின் இலவச அரிசி திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் அந்தியோதயா மற்றும் முன்னுரிமை பயனாளிகள் கூடுதல் இலவச அரிசியை ரேஷன் கடைகளில் வாங்கி பயன்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |